ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் !!

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் !!
  1. இத்தலத்தில் யார் ஒருவர் ஏழை எளியவர்களுக்கு அமுது படைக்கிறாரோ அவர் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்.
  2. பால், தயிர், நெய், தேன், பழங்கள், தேங்காய் இவைகளோடு அணிகலன் கொண்டு சிறந்த துதிப் பாடலோடு ஸ்ரீ மங்களாம்பிகையும், வாஞ்சிநாதரையும் வழிபடுபவர் சிறந்த அரசனாகி சிவ சாயுஞ்யம் அடைகிறார்.
  3. இத்திருக்கோயிலுக்கு பிரகாரம், மண்டபம், கோபுரங்கள் கட்டி வைப்பவர். அனைவராலும் வணங்கத்தக்க அரசனாகிறார்.
  4. இத்திருக்கோயிலுக்கு தேர் திருப்பணி செய்து கோமுரசு, மத்தாளம் துணைக் கருவிகளோடு தேர்த்திருவிழா செய்பவர் சிறந்த போகங்கள் அனுபவித்து தேவரும் கந்தர்வரும், பகலும் இரவும் துதிக்க நூறு கற்ப கோடிகாலம் தனது மனித உருவத்தோடு இறைவனுக்கு முன் வசிப்பார்.
  5. திருவாஞ்சியத்தில் எவர் வசந்த விழா செய்கிறாரோ அவர் சிறந்த விமானம் ஏறி சிவ சன்னதியில் வசிக்கிறார்.
  6. குப்த கங்கை திருக்குளத்தினை தூர்வாரி சுத்தம் செய்து தீர்த்தத்தினை சுத்தம் செய்தால் தனது குடி, குலத்துடன் சிவலோகம் அடைந்து சத்திய வித்திலும், அபய வித்திலும் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியத்தை அடைவார். ஸ்ரீருவாஞ்சியம் திருவாஞ்சியேசர் விமானத்திற்கு சுற்று வட்டம் கிருதாயுகத்தில் இரண்டு யோசனை தூரமும் திரேதாயுகத்தில் அதில் பாதியும், துவாபரயுகத்தில் அதிலும் பாதியும் கலியுகத்தில் ஐந்து குரோசமும் (ஐந்து நாழி வழி) ஆகும். அதில் வசிக்கும் மக்கள் முக்தியடைவது நிச்சயம்.
  7. இச்சிவாலயத்தில் எவன் ஒரு கணம் உறைகிறானோ அவன் கணங்களுக்கு அதிபதியாகிறான்.
  8. நீர் விழா, வசந்த விழா செய்பவன் சிவ சன்னதியில் வசிக்கிறான். தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜை செய்பவன் சிவனோடு வசிக்கிறான்.
  9. பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.
  10. குடை சாமரம் விசிறி வாத்திய முழக்கங்களுடன் திருத்தேர் விழா செய்பவன், செய்விப்பவன் சிறந்த மங்கையருடன் கூடி தேவர் துதிக்க நூறு கற்பகோடி காலம் உடலுடன் தேவனுக்கு முன் வசிப்பான்.
  11. தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.
  12. படி கட்டுபவன் சிவகாயுஜ்யம் அடைவான். பாசி நீக்குபவன் தனது கோடி குலத்துடன் சிவலோகம் அடைவான்.
  13. வஸ்திரம் மலர் இவற்றால் மந்திரமின்றி பூசிப்பவன் கூட கோடி குலத்தை உயர்த்துவான்.
  14. கழுவாயற்ற பாவங்களும் வாஞ்சீஸ்வரரை தரிசித்தாலும், முனி தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி முக்தியுண்டாகும்.
  15. அரை கணம் இங்கு வசித்தாலும் ஊர்வசியை சேருவான். எவள் வீட்டில் இப்புராணம் எழுதப்படுகிறதோ அவள் வீட்டில் லட்சுமி செல்வம் நோயின்மையை மேன்மேலும் வளர்க்கிறாள். இதனை படிப்பவனும், கேட்பவனும் மூவகை இன்பங்களை துய்த்து முக்தியடைகிறான். – ஸ்கந்தபுராணம் சனத்குமா ரஸம் ஹிதை 58-ம் அத்தியாயம்.

Leave a Reply