ஏழை,எளிய மக்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய ஆர்த்திடா பவுண்டேஷன் தொண்டு திறுவனம்.

ஏழை,எளிய மக்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய ஆர்த்திடா பவுண்டேஷன் தொண்டு திறுவனம்.

கோவை:

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்த்திடா பவுண்டேசன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களையும், விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோவையை சுற்றியுள்ள ஆதரவற்ற, தெருவோரம் வசிக்கும் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இருகூர் பகுதி சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஏழை,எளிய பெண்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு உடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகளை கொடுத்து மகிழ்வித்தனர்.

இதுகுறித்து ஆர்த்திடா பவுண்டேஷனின் நிறுவனத் தலைவர் நீனா ஆர்த்திடா கூறும் போது, கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எங்களது தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை இந்த சமூக பணிகளுக்காக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். மேலும், ஏழை,எளிய மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது, கிராமப்புற மக்களுக்கு சுகாதாரம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, சுயதொழில் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றோம். அதில் ஒரு பகுதியாக கடந்த 10 நாட்களாக தீபாவளி பண்டியையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.

இதில் ஒரு நிகழ்வாக இன்று கோகுலம் பார்க் ஹோட்டலில் இருகூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உடைகள் மற்றும் இனிப்பு,பட்டாசு வகைகளை அளித்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாதா ஹோல்டிங் நிறுவனத் தலைவர் பிஜு அலெக்ஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் துணைபொது மேலாளர் ஜெலின் மற்றும் ஆர்த்திடா பவுண்டேஷன் மற்றும் கிரியேசனின் இயக்குனர் ரெனீஷ், ஒருங்கிணைப்பாளர்கள் கோவை மருது மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் 25 பேர்களுக்கு ஒரு வருட விபத்து காப்பீடு வழங்கப்பட்டது.

Leave a Reply