உடல் எடையை குறைக்கும் வழிகள்!!

உடல் எடையை குறைக்கும் வழிகள்!!

பண்டிகை காலத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் உங்கள் கவனத்திற்கு…

  • உணவு, உடற்பயிற்சி, உடல் எடை இந்த மூன்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்காணிக்கவும். உணவுப்பழக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். உடற்பயிற்சி வழக்கத்தையும் தொடர்ந்துவிடலாம். ஆனால் உடல் எடை அதிகரித்து இருந்தால் அதனை குறைப்பதற்கு இன்னும் கடுமையான பயிற்சிகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கேற்ப தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்கவும். அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு வாரத்திற்குள்ளோ, ஒரு மாதத்திற்குள்ளோ 5 முதல் 10 கிலோ எடையை குறைக்க முயற்சிப்பது ஆபத்தானது. அத்தகைய இலக்குகளை தவிர்க்கவும். யதார்த்தமான இலக்கை நிர்ணயித்து அதனை எட்டுவதற்கு முயற்சிக்கவும். அப்படி படிப்படியாக உடல் எடை குறைப்பு முயற்சியில் கவனம் செலுத்துவது பலன் தரும்.
  • ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பாடு மட்டுமல்ல மற்ற உணவு பதார்த்தங்களையும் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பழங்கள், சூப், ஜூஸ் என ஏதாவது ஒன்றை குறைவான அளவு உட்கொள்ளலாம். அது அதிகம் உணவு உட்கொள்வதை தவிர்க்க செய்துவிடும். குறைவான, சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது அதிக கலோரிகள் உட்கொள்வதை கட்டுப்படுத்த உதவும். சாப்பிடும் கலோரிகளின் அளவு குறைந்தாலே உடல் எடை அதிகரிக்காது.
  • நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். அதேவேளையில் ஒரே சமயத்தில் அதிகம் தண்ணீர் பருகுவதையும் தவிர்க்கவும். சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது பலன் தரும். சில நேரங்களில் தாகம் ஏற்படுவதை பசி என்று தவறாக நினைக்கலாம். உடலில் நீரேற்றம் சரியாக இருந்தால், உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் சுமுகமாக நடைபெறும்.
  • பழங்கள், காய்கறிகள், புரதங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். இந்த உணவுகள் வயிற்றை நிறைவாகவும், திருப்தியாகவும் வைத்திருக்க போதுமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

Leave a Reply