திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை!!

திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனை!!

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு சின்ன கடைத்தெருவில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் அலங்கார ரூபத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தார்.

இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மாடவீதிகளில் பிடாரி அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

Leave a Reply