கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்!! ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு விடுத்த நிர்வாகிகள்!!

கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்!! ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு விடுத்த நிர்வாகிகள்!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தமிழ் சினிமாவில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் ஹாசனுக்கும் அழைப்பு நேரில் விடுக்கப்பட்டுள்ளது இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply