டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் போபண்ணா – மேத்யூ எப்டென் ஜோடிகள் !!

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் போபண்ணா – மேத்யூ எப்டென் ஜோடிகள் !!

துரின்:
தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் ‘கிரீன்’, ‘ரெட்’, என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர்.

இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இத்தாலி வீரர் யானிக் சின்னெர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவை வீழ்த்தினார்.

லீக் சுற்று முடிவில் ‘கிரீன்’ பிரிவில் யானிக் சின்னெர் 3 வெற்றியுடன் முதலிடம் பிடித்தும், ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினர். சின்னெர் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

இரட்டையர் பிரிவில் (ரெட்) தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தியது.

லீக் சுற்று முடிவில் ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் – சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா – மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

Leave a Reply