பச்சோந்திகளையே வெட்கித் தலைகுனிய வைப்பவர் தான் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் – பாஜக கடும் விமர்சனம்!!

பச்சோந்திகளையே வெட்கித் தலைகுனிய வைப்பவர் தான் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் என தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், பச்சோந்திகளையே வெட்கித் தலைகுனிய வைப்பவர் தான் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது போராளி வேஷம்! முதல்வரான பிறகு சர்வாதிகாரி வேஷம்! உண்மையில் இவரது சுயரூபம் தான் என்ன?
நிலையான கொள்கைகள் இல்லாதவர். மக்களை ஏமாற்ற எப்போ வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் உருட்டுபவர். நல்லாட்சி அல்ல, ஆட்சி செய்வதற்கே தேவையான குறைந்தபட்சத் திறமைகள் கூட ஏதுமில்லாதவர்.
அன்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு ஏன் என்று கேட்டால், “நாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்” என்று வெட்கமில்லாமல் சொல்லும் நாகரீகமற்ற ஒரு அரசியல்வாதி. தமிழகத்திற்கு நிகழ்ந்த பேரவலங்களில் தலையானது தற்பொழுது நடக்கின்ற அரிவாலயம் ஆட்சி தான்! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.