என் விஷயங்களை நான் தனி வழியில் செய்வேன் சுருதிஹாசன்!!

என் விஷயங்களை நான் தனி வழியில் செய்வேன் சுருதிஹாசன்!!

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். ஏழாம் அறிவு என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். சினிமாவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சுருதிஹாசன் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

சினிமா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்ந்து கருத்துக்களை பதிவிடுவார்.

சமீபத்தில் தீபாவளி பண்டிகையை நண்பருடன் சேர்ந்து கொண்டாடி அந்த புகை ப்படங்களையும் வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து சொல்லி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது பெயரை உடலில் வரைந்து உள்ள டாட்டூ தெரியும்படி அவர் புகைப்படம் வெளியிட்டு கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் வருமாறு:-

இந்த நேரத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து வெளியே வர விரும்புகிறேன். இந்த முறை நான் எழுந்து நின்று கத்துகிறேன்.

நான் விஷயங்களை என் வழியில் செய்வேன், இது என் வழி அல்லது நெடுஞ்சாலை என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply