மருத்துவ பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்த்!! தேமுதிக விளக்கம்….

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்த்!! தேமுதிக விளக்கம்….

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து ஓரிருநாளில் வீடு திரும்புவார் என்று தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.

செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள்.

இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply