வங்காளதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக்கில் இணைந்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன்!!

வங்காளதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக்கில் இணைந்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன்!!

வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன். வங்காளதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

இவர் தலைமையில் வங்காளதேசம் அணி உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. இருந்தபோதிலும் வங்காளதேச அணி சோபிக்க தவறிவிட்டது.

இலங்கை வீரர் மேத்யூஸ் “டைம் அவுட்” முறையில் ஆட்டமிழந்த விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தற்போது ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். வங்காளதேசத்தின் ஆளும் கட்சியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது.

இதனால் ஷாகிப் அல் ஹசன் தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார். வங்காளதேசத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.


பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. அப்படி புறக்கணித்தால் ஷேக் ஹசினா 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply