திருவண்ணாமலை: 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது….

திருவண்ணாமலை: 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது….


திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் கருவறையின் முன் பரணி தீபம் ஏற்பட்டது.


இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வை காண உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள்,வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணா மலையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் ‘அரோகரா’ என்ற முழக்கத்துடன் விண்ணை ஒளிர செய்யும் விதமாக மகா தீபம் ஏற்பட்டது.

Leave a Reply