தேமுதிக தலைவர் கேப்டன் விஜய காந்த் பூரண குணம் பெற முதியோர் இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜய காந்த் பூரண குணம் பெற முதியோர் இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என முதியோர் இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி 50க்கும் மேற்பட்ட முதியோர்கள் பிரார்த்தனை ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது .

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வேலூர் அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட முதியோர்கள் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பி மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் எங்களைப் போன்ற முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என மெழுகுவர்த்தி ஏந்தி உருக்கத்தோடு பிரார்த்தனையை செய்தது காண்போரை கண் கலங்க வைத்தது.

Leave a Reply