இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமிராய் இரு அமீர்…. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு!!

இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமிராய் இரு அமீர்…. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு!!

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை சமீபத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா கொடுத்த நேர்காணலில் அமீர் பற்றிய சர்ச்சை பேச்சுதான். அதற்கு ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

17 ஆண்டுகளாக தொடரும் இந்த பருத்திவீரன் சர்ச்சை குறித்து நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன், சிநேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா, உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல்ராஜாவிற்கு கடுமையான கண்டங்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சமீபத்திய சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்.

ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்” என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply