கடைசி டி20-யிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது!!

கடைசி டி20-யிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஹெட் 28, பிலிப் 4, ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17, மேத்யூ ஷார்ட் 16, பென் துவர்ஷுயிஸ் 0 ரன்னில் வெளியேறினர்.

ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார். கடைசி வரை போராடிய மேத்யூ வேட் 22 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

Leave a Reply