60-வது பிறந்த நாளை கொண்டாடிய நெப்போலியன் – சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா!!

60-வது பிறந்த நாளை கொண்டாடிய நெப்போலியன் – சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா!!

நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா “கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, புதுநெல்லு புதுநாத்து” உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தர் நடிகர் நெப்போலியன்.

அரசியலிலும் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு திரையுலகினர் பலர் செல்போன் மூலமும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை குஷ்பு, மீனா ஆகியோர் நெல்போலியனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தப்பதற்காக அமெரிக்கா சென்றனர்.

அவர்களை பார்த்ததும் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

இதுபற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-

திரை உலகில் நெப்போலியனுடன் நடித்த எட்டுப்பட்டி ராசா படமும் அதில் இடம் பெற்ற பாடலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அதேபோல் நெப்போலியன் பல படங்களில் வில்லனாக வருவார். ஆனால் அவரது குணம் நேர்மாறானது. அவருடைய நட்பு மிகவும் இனிமையானது.

அதனால்தான் அவரது நட்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரிடம் சொல்லாமலே மணி விழாவில் கலந்து சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நேரில் சென்றோம்.

எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம். இதுதான் அவர் எங்கள் மீது வைத்துள்ள அன்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply