மாட்டு மூத்திர வட மாநிலங்கள் .. திமுக எம்பி செந்தில்குமாரின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் …

மாட்டு மூத்திர வட மாநிலங்கள் .. திமுக எம்பி செந்தில்குமாரின்   சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் …

டெல்லி ;

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது  ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்பி செந்தில்குமார், “யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பது தான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. 

எப்போது அவர்களால் வெல்லமுடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள். எங்கே அவர்களது வெற்றி உறுதி செய்யப்படுகிறதோ அங்கே அவர்கள் அதை செய்வதில்லை” என்று கூறினார் திமுக எம்பி செந்தில்குமார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த நாட்டின் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக வெற்றிபெறுவதெல்லாம் நாங்கள் மாட்டு மூத்திர மாநிலங்கள் என்று குறிப்பிடும் ஹிந்தி மாநிலங்களின் இதயப்பகுதியில்தான். பாஜகவால் தென்னிந்திய மாநிலங்களில் வெற்றிபெற முடியாது. பாஜகவால் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியாது. 

தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அவர்களுக்கு கிடைத்த முடிவுகளைப் பாருங்கள். நாங்கள் அங்கே மிகவும் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார் திமுக எம்பி செந்தில்குமார்.

திமுக எம்பி செந்தில்குமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பியின் பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கண்டித்துள்ளனர். வட மாநிலங்கள் ‘கோ மூத்திர மாநிலங்கள்’ எனக் கூறிய விவகாரத்தில், திமுக எம்பி செந்தில் குமாரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply