நைவேத்தியப் பொருட்கள் ஐயப்பனுக்கு செலுத்துவது ஏன் தெரியுமா?

நைவேத்தியப் பொருட்கள் ஐயப்பனுக்கு செலுத்துவது ஏன் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.

செல்லும் பாதை படுமோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக்காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார்.

நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய் பண்டங்களை கொண்டு செல்வார். நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு போகும் பழக்கம் ஏற்பட்டது.

சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்

 1. இருமுடியுடன் 18 படி ஏறுதல்
 2. நெய் அபிஷேகம்
 3. தீபஸ்தம்பத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்
 4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)
 5. ஐயப்ப தரிசனம்
 6. மஞ்சமாதா தரிசனம்
 7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு
 8. கடுத்த சுவாமிக்குப் பிரார்த்தனை
 9. கருப்பசுவாமிக்குப் பிரார்த்தனை
 10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை
 11. வாபர் சுவாமிக்கு காணிக்கை செலுத்துதல்
 12. திருவாபரணம் பெட்டி தரிசனம்
 13. ஜோதி தரிசனம்
 14. பஸ்மகுளத்தில் குளித்தல்
 15. மகரவிளக்குத் தரிசனம்
 16. பிரசாதம் பெற்றுக்கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட)
 17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்
 18. 18 படி இறங்குதல்

இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவை – செய்யலாம்.

Leave a Reply