பச்சோந்தி கூட சிறிது நேரம் கழித்து  தான் கலர் மாறும்.. ஆனால் அதை விட வேகமாக  இவர் கலர் மாறுவார்- கமல்ஹாசனை விளாசிய எடப்பாடி…

பச்சோந்தி கூட சிறிது நேரம் கழித்து  தான் கலர் மாறும்.. ஆனால் அதை விட வேகமாக  இவர் கலர் மாறுவார்- கமல்ஹாசனை விளாசிய எடப்பாடி…

சென்னை ;

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

“மழை பெய்து முடித்த பிறகு தான் வெள்ளநீரை அகற்றும் ராட்சத மோட்டாரை என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து கேட்டிருந்தோம் என தலைமை செயலாளரே பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படியென்றால் எந்த அளவுக்கு இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும், தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டாமல் ராட்சத மோட்டார் இயந்திரத்தை தயார் நிலையில் வைத்திருந்தால் குறுகிய காலத்திலேயே தேங்கிய நீரை அப்புறப்படுத்தியிருக்கலாம்.

திமுக ஆட்சிக்கு வந்த உடனே எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரில் தண்ணீர் தேங்காத அளவுக்கு வடிகால் வசதி செய்திருக்கிறோம் என வீர வசனம் பேசினர். ஆனால் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. தண்ணீர் தேங்காத இடமே கிடையாது” என்று கடுமையாக சாடினார்.

மேலும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், அரசை குறை சொல்வதற்கான நேரமில்லை. நாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு,

‘அவரை எல்லாம் ஒரு அரசியல்வாதியாகவே நான் கருதவில்லை.

எம்.பி. தேர்தல் வருகிறது. திமுக சார்பில் நிற்க போகிறார். அதற்காக இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அப்பப்ப அறிக்கையை மாற்றிக்கொள்கிறார்.

பச்சோந்தி கூட சிறிது நேரம் கழித்து தான் கலர் மாறும். அதுக்கும் மேல விரைவாக கலர் மாறுகின்ற தலைவர் அவர். அவருடைய கட்சியில் பல பேர் வெளியில் போய்விட்டார்கள்.

அவர் ஒருத்தர்தான் இப்போது இருப்பார் என நினைக்கிறேன். எனவே அவர் சொல்கிற அந்த கருத்துக்கு நாம் செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை என நான் கருதுகிறேன்’ என காட்டமாக விமர்சித்தார்.

Leave a Reply