சென்னை அருகே கால்வாயில் கொட்டப்பட்டு கிடந்த 5 ஆயிரம் பால் பாக்கெட்டுகள்.. பொது மக்கள் அதிர்ச்சி..

சென்னை அருகே கால்வாயில் கொட்டப்பட்டு கிடந்த 5 ஆயிரம் பால் பாக்கெட்டுகள்.. பொது மக்கள் அதிர்ச்சி..

சென்னை;

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, பால் பற்றாக்குறை நிலவியது.

இதற்கு மத்தியில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரத்தில் காலியாக உள்ள ஒரு கால்வாயில் சனிக்கிழமை கிட்டத்தட்ட 5,000 பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுக்  கிடந்தது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

சென்னை தாம்பரம் நகரின் புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் பால் பாக்கெட்டுகள் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

வைகை நகர் விரிவாக்கம் ஏரிக்கரை பகுதியில் கால்வாயில் 5 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்த இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகளில் வசிப்பவர்கள் பால் வாங்க முடியாமல் திணறி வரும் நிலையில், இப்படி 5 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டுக் கிடப்பது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மிக்ஜாம் புயல் காரணமாக பல பகுதிகளில் டிசம்பர் 4-ம் தேதி கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. பல சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் டிசம்பர் 4-ம் தேதி மூடப்பட்டன. மேலும், தங்கள் வசம் உள்ள பால் பாக்கெட்டுகளை விற்க முடியாத விற்பனையாளர்கள் கால்வாயில் கொட்டியிருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply