தேமுதிக பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் – பிரேமலதா விஜயகாந்த்….

தேமுதிக பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் – பிரேமலதா விஜயகாந்த்….

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் அவர்கள் பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு.எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்புக்குரிய திருமதி.சசிகலா அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன்,MP., அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கும், திரு.விஜயபாஸ்கர் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் திரு.G.K.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் திரு.கருணாஸ் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply