தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி!!

புதுடெல்லி:

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து தீபக் சாஹர் திடீரென விலகியுள்ளார். சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல், டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்

Leave a Reply