காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது – தலைமைச் செயலாளர் தகவல்!!

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது – தலைமைச் செயலாளர் தகவல்!!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது; இரு மாவட்டங்களிலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது; மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது; மழை வெள்ள மீட்புப் பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்; சூலூர் விமான தளத்தில் இருந்து விமானம் மூலம் நிவாரண உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; தூத்துக்குடியில் மழைநீர் வடிய சற்று தாமதம் ஏற்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள பாதிப்பு இருப்பதால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை உதவி கோரப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தென் மாவட்டங்களில் உணவு பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் உள்ள பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 62 செ.மீ ‘மழை பெய்துள்ளது.

Leave a Reply