கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பொழிவு காலை முதல் பெய்துள்ளது.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டோர் இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சராசரியாக 28 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 40,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது. தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அணையில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மிக வேகமாக ஆற்றில் தண்ணீர் வரும் என்பதால் கரையோர மக்களை வெளியேற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரையோர மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூலைக்கரைப்பட்டி பகுதியில் அதிக கன மழை பெய்துள்ள சூழலில் அங்குள்ள துணை மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply