மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதிக கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தோம். அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், கடைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

நெல்லையில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்த கணக்கீடு செய்யும் பணி நடைபெறும். ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக திருநெல்வேலி பெல் பள்ளி வளாகத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Leave a Reply