திருவண்ணாமலை மாவட்டம் அருகே செங்கத்தில் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கும் நாய்!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே செங்கத்தில் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கும் நாய்!!

செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave a Reply