2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள ‘லவ்வர்’ திரைப்படம்!!

2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள ‘லவ்வர்’ திரைப்படம்!!

8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

‘லவ்வர்’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply