ஐ.பி.எல். போட்டி: டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் !!

ஐ.பி.எல். போட்டி: டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் !!

சென்னை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 22-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப் டன் டோனி இந்த சீசனிலும் விளையாடுகிறார்.

கடந்த போட்டித் தொட ரின்போது அவரிடம் ஓய்வு பற்றி கேட்டபோது, ரசிகர் களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய் வேன் என்று கூறினார். அதன்படி டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறார்.

அவர் கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டோனி தற்போது நன்றாக இருக்கிறார். அவர் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இன்னும் 10 நாட்களில் டோனி வலைப்பயிற்சியை தொடங்குவார். மார்ச் முதல் வாரத்தில் எங்களது பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ந்தேதி தொடங்குவதால் அந்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் முதல் முகாமை நடத்துவோம்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு ஐ.பி.எல். தொடரின் பாதி ஆட்டங்கள் வேறு நாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப் பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

போட்டி அட்டவணையை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி அவர்கள் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ஐ.பி.எல். விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply