உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்!!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் , ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களும் சிவபெருமாள் கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது.சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் ,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், தனித்தனி தேர்களில் வீதிகளில் வலம் வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.

Leave a Reply