ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு!!

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ‘தளபதி 68’ படத்திற்கு ‘கோட்’ (Goat) என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தளபதி 68’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு டைட்டில் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply