நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ள விஷால்!!

நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ள விஷால்!!

செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது பட புரொமோஷன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply