(2.1.2024 முதல் 8.1.2024 வரை) விசேஷங்கள்!!

(2.1.2024 முதல் 8.1.2024 வரை) விசேஷங்கள்!!

2-ந்தேதி (செவ்வாய்)

 • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
 • தேய்பிறை சஷ்டி விரதம்.
 • திருநெல்வேலி வீரராகவபுரம் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை.
 • கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (புதன்)

 • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவர் திருமஞ்சனம்.
 • திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
 • மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (வியாழன்)

 • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல உயிர்களுக்கும் படியளந்து அருளிய லீலை.
 • பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
 • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
 • சமநோக்கு நாள்.

5-ந்தேதி (வெள்ளி)

 • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கண்டருளல்.
 • மதுரை செல்லத்தம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
 • திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருமஞ்சனம்.
 • திருவிடைமருதூர் பிரகத்குசாம் பிகை புறப்பாடு.
 • சமநோக்கு நாள்.

6-ந்தேதி (சனி)

 • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
 • மதுரை செல்லத்தம்மன் திருவீதி உலா.
 • திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
 • சமநோக்கு நாள்.

7-ந்தேதி (ஞாயிறு)

 • சர்வ ஏகாதசி.
 • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
 • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
 • இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
 • கீழ்நோக்கு நாள்.

8-ந்தேதி (திங்கள்)

 • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு விழா தொடக்கம்.
 • திருவைகுண்டம் கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
 • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
 • சமநோக்கு நாள்

Leave a Reply