தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் ”வேட்டையன்” படப்பிடிப்பு : ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்!!

தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் ”வேட்டையன்” படப்பிடிப்பு : ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்!!

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்-நடிகைகள் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது.

நேற்று ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

படப்பிடிப்பு முடிந்த பின் கேரவன் செல்லும் போதும், மீண்டும் ஒட்டலுக்கு திரும்பும் போதும் ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்தபடி சென்றார். இன்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply