நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இளநீர்!!

நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இளநீர்!!

பொதுவாக இளநீர் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .அதனால் இந்த பதிவில் இளநீர் குடிப்பதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.இளநீர் பொதுவாக அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒன்று. இதில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

2.பொதுவாக நம் உடலில் மாரடைப்பு வரவும் பக்கவாதம் வரவும் முக்கிய காரணமாக இருப்பது உயர் ரத்த அழுத்தம்.

3.இப்படி உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீரை குடிப்பது சிறந்தது.

4.ஏனெனில் இளநீர் நச்சு நீக்கும் பானம் என அறியப்படுகிறது. இருப்பினும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுபவர்கள் இளநீரை தவிர்ப்பது சிறந்தது.

5.இதய நோய்களை கட்டுப்படுத்த இளநீர் மிகவும் உதவுகிறது.

6.நம் உடலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ள இளநீர் பெரும் அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

7.நம் உடலில் நீர் சத்தை தேக்கி வைத்துக் கொள்ள இரவில் ஒரு டம்ளர் இளநீரை குடித்தால் இது உடலில் அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைத்து நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

8.இது மட்டும் இல்லாமல் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை இரவில் சாப்பிடுவதன் மூலம் இருக்கும் சத்துக்கள் இரவு முழுவதும் உடலில் வினைபுரிந்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

9.மேலும் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 12 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

10.மேலும் இளநீர் குடிப்பதன் மூலம் முடி வளர்வது மட்டுமில்லாமல் சருமத்திற்கும் நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply