கிரிக்கெட் விளையாட விண்ணப்பித்தது தெரிய வந்ததால் தந்தை திட்டினார் – ஜுரேல் !!

கிரிக்கெட் விளையாட விண்ணப்பித்தது தெரிய வந்ததால் தந்தை திட்டினார் – ஜுரேல் !!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 22 வயது த்ருவ் ஜுரேல் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். இவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் அவரது தந்தை 800 ரூபாய் கடன் வாங்கி பேட் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் விளையாட்டு குறித்து த்ருவ் ஜுரேல் கூறியதாவது:-

நான் ராணுவ பள்ளியில் படித்தேன். அப்போது விடுமுறை காலத்தின்போது, ஆக்ராவில் உள்ள எக்லாவ்யா மைதானத்தின் கிரிக்கெட் முகாமில் கலந்து கொள்ள நினைத்தேன். அதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எனது தந்தையிடம் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

தந்தைக்கு தெரியவந்ததால் என்னை திட்டினார். என்றாலும் கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.

மேலும், தந்தையிடம் கிரிக்கெட் பேக் (cricket kit) வேண்டும் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் தேவைப்படும் என்றேன். அப்போது என்னிடம் விளையாட வேண்டாம். விளையாட்டை நிறுத்து என்றார்.

ஆனால், நான் அடம்பிடித்து, பாத்ரூம் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாயார், அவரது தங்கத் செயினை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்.

எனது நண்பர்கள் என்னிடம், இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தெரிவித்தார்கள். நான் தேர்வானதை அவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் எந்த இந்திய அணிக்கு என்று கேட்டார்கள்.

ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணிக்கு என்றேன். இதைக் கேட்டு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சி வசப்பட்டது.

இவ்வாறு த்ருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply