சமுத்திரகனி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் !!

சமுத்திரகனி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் !!

தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘ராமம் ராகவம்’. தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , பிருத்வி போலவரபு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்கிறார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார்.

அப்பா மகன் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமுத்திரகனி மற்றும் தன்ராஜ் கொரனானி இடம்பிடித்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply