மலர் டீச்சரை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இப்படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

மலர் டீச்சரை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இப்படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

கடந்த 2015-ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அல்போன்ஸ் புத்திரனுக்கு இப்படம் மிகப்பெரிய மையில்கல்லாக அமைந்தது. ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராஜேஷ் முருகன் இசையில் ‘பிரேமம்’ படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் ‘மலரே நின்னை காணாதிருந்தால்’ பாடல் இன்றும் காதலர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ‘பிரேமம்’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கியது.

இந்நிலையில், மலர் டீச்சரை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பிரேமம்’ திரைப்படம் பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Leave a Reply