திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? திகைத்துப் போன மருத்துவர்கள்?

டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய நாட்டின் மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், இவர் ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.இவர் ஒரு திருநம்பி ஆவார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். அவர்களது ஆசையும் கூட அதுதான்.அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து அவர் கர்ப்பமானார்.

தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.இந்த சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அதேபோல மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பியிருந்தார்கள்.

பல ஆராய்ச்சிகளிலும் இதனால் இவர்கள் ஈடுபட்டார்கள்.அதன்படி சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும் இயற்கையான பிறப்புறுப்புகள் உள்ளதால் இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கர்ப்பமாக முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 2020இல் அமெரிக்காவின் ஒரேகானில் ஒரு பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறிய ஒருவர் இதுபோன்று குழந்தை பெற்றெடுத்தார்.

உலகில் இதுபோன்ற அதிசயங்களும் இன்றளவு நடக்கத்தான் செய்கிறது. மேலும் இவர்கள் இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்களும் மற்றும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply