நீங்க மூணு பேரும் ஒண்ணா சேரலாம் … ஆனா அதிமுகவுக்கு உள்ள வரமுடியாது ….ஜெயக்குமார் ஆவேச பேட்டி …

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தி.மு.க ஆட்சி ஒரு துக்ளக் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு திராவிடத்தையே இழுக்கப்படுத்தும் விதமாக தி.மு.க-வின் செயல்பாடுகள் இருக்கின்றன.

பெண்களுக்கு விலையில்லாப் பயணம் என்ற திட்டம் ஒரு மோசடியான திட்டம். மக்களை மோசடிசெய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, மோசடியான திட்டங்களை விளம்பரத்தின் மூலமாக முன்னிலைப்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆதாயம் தேடி வருகிறது.

சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் சேர்ந்து கொள்ளலாமே தவிர… அவர்கள் மூவரையும் அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள முடியாது. அது ஜென்மத்திலும் நடக்காது. எத்தனை நரிகள் ஒன்று சேர்ந்தாலும் அவர்களின் தந்திரத்தால் இந்த மாபெரும் இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.

தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. கொலை, கொள்ளை, மாணவர்களின் மர்மமான மரணம், பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகரித்து வருகின்றன. தமிழ்நாடு கொலையில் முதன்மையான மாநிலமாக இருக்கிறது” என்றார்.

Leave a Reply