இந்த நாளில் ”பல்லியை” கண்டால் கோடிகள் வந்து குவியும்!!

நம்முடைய சாஸ்திரங்கள் பல்லியைப் பற்றிய பல தகவல்களை சொல்கிறது. நம்முடைய முன்னோர்களும் பல்லியை பற்றிய பல தகவல்களை சொல்லி வைத்துள்ளார்கள்.

அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாள். இந்த அட்சய திருதியை நாளில் பல்லியை அவ்வளவு எளிதில் யாராலும் காண முடியாதாம். அட்சய திருதியை நாளில் மட்டும் பல்லிகள் மனிதர்கள் யாருடைய கண்ணுக்கும் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என வாஸ்து பகவான் கட்டளை இட்டுள்ளதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

வாஸ்து பகவானின் கட்டளையை ஏற்று எல்லா பல்லிகளும் அட்சய திரிதியை அன்று யார் கண்ணுக்கும் தெரியாத இடங்களில் போய் ஒளிந்து கொண்டிருக்குமாம்.

இதனால் வீடுகளில் உள்ளவர்கள் பல்லியை அட்சயதிரிதியை அன்று மட்டும் காணமுடியாது என சொல்லப்படுகிறது. இதையும் தாண்டி நீங்கள் அட்சய திருதியை அன்றைக்கு பல்லியை பார்த்தால் உங்களுடைய ஏழு ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கி விடுமாம்.

உங்களைப் பிடித்து இருக்கக்கூடிய எல்லா தரித்திரமும் விலகுமாம். அன்று நீங்கள் பல்லியை கண்டால் சகல சம்பத்துகளும் உங்களை தேடி வருமாம்.

அதைத் தொடர்ந்து வரும் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமாம். உலகிலேயே நீங்கள் மிகப்பெரிய தனவானாக வாழ்வீர்கள் என சொல்லப்படுகிறது. பல்லி லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது.

நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது பல்லி சத்தமிட்டால் அது நல்ல சகுனமாக சொல்லப்படுகிறது.

உங்களுடைய வீட்டில் பல்லி இருந்தால் எப்பொழுதும் உங்களுடைய வீட்டில் தானியங்களுக்கு குறைவிருக்காது, எப்பொழுதும் உங்களுடைய வீட்டில் உணவு தானியங்கள் நிரம்பி இருக்கும் என சொல்லப்படுகிறது. உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடையே எப்பொழுதும் ஒரு நல்லிணக்கம் ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் இது உங்களுடைய வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. சாஸ்திரத்தின்படி பல்லியை நீங்கள் தீபாவளி பண்டிகை அன்று கண்டால் அது மங்களகரமானது கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று இரவில் உங்களுடைய வீட்டில் நீங்கள் பல்லியை பார்த்தால் அது மிகவும் நல்ல அறிகுறி என சொல்லப்படுகிறது. ஏனென்றால் பல்லி லட்சுமிதேவியை குறிக்கிறது.

ஆகையால் தீபாவளி அன்றைக்கு உங்களுடைய வீட்டில் நீங்கள் பல்லியை கண்டால் அது உங்களுடைய வீட்டிற்கு லட்சுமிதேவி வருவதை சுட்டிக் காட்டுகிறது என நம்பப்படுகிறது. நீங்கள் வீடுகட்டி உங்களுடைய புதிய வீட்டில் நுழையும் பொழுது பல்லியை நீங்கள் கண்டால் அது உங்களுடைய முன்னோர்கள் அல்லது தாய், தந்தையினரின் வருகையை சுட்டிக்காட்டுகிறது என சொல்லப்படுகிறது.

அதுபோல நீங்கள் வெளியிலிருந்து உங்களுடைய வீட்டிற்குள் நுழையும் பொழுது நீங்கள் ஒரு பல்லியை கண்டால் அது உங்களுடைய முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பதற்காக உங்கள் முன்னர் தோன்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த நேரத்திலும் உங்களுடைய வீட்டில் ஒரு பல்லி இறந்து கிடப்பதை நீங்கள் காணக் கூடாது என சொல்லப்படுகிறது.

இது ஒரு கெட்ட சகுனமாகவே சொல்லப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பல்லிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை நீங்கள் கண்டால் அது உங்களுடைய வீட்டில் அல்லது உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனையை குறிக்கிறது.

பல்லிகளுக்கிடையே ஏற்படக்கூடிய சண்டை உங்களுடைய வீட்டில் உள்ளவர்களிடம் மற்றும் உங்களுக்கு பிடித்தவர்களிடம் ஒற்றுமையின்மை இருப்பதை காட்டுகிறது. காரணமின்றி உங்களுடைய வீட்டில் சண்டை தொடங்க போவதையும் கூறுவதாக சொல்லப்படுகிறது.

உங்களுடைய வீட்டு தரையில் தொடர்ந்து பல்லி நடமாடுவதை நீங்கள் கண்டால் ஏதோ வித்தியாசமான ஒரு நிகழ்வு அல்லது ஒரு பிரச்சனை உங்களுக்கு ஏற்படப் போகிறது என்பதை இது குறிக்கிறது என சொல்லப்படுகிறது. நீங்கள் உங்களுடைய மனதில் ஒரு நல்ல காரியத்தை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் முன்னர் ஒரு பல்லி தோன்றினால் அந்த நல்ல காரியம் சிறப்பாக நடந்து முடியும் என்பதை குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

உங்களுடைய வீட்டின் பூஜை அறையில் பல்லி இருப்பது நீங்கள் பார்த்தால் உங்களிடம் செல்வம் அதிகரிக்கப் போவதை இது குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் மனதில் இருக்கக்கூடிய மனக்குறைகள் பிரச்சனைகள் மறைந்து மிகவும் சந்தோசமாக தொடர்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு இருக்கும் என்பதை குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

நீங்கள் புதிதாக ஒரு முயற்சியை செய்து கொண்டு வரும் பொழுது பல்லி சுவரில் மேல் ஏறி செல்வதைப் பார்த்தால் அது உங்களுக்கு விரைவில் அதிக நல்ல பலன்களையும் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

பல்லி சுவரில் கீழே இறங்கி வருவதை நீங்கள் பார்த்தால் உங்களுடைய முயற்சியில் ஒரு சில தடுமாற்றங்கள் ஏற்படும் என்பதை குறிக்கிறது. இருந்தாலும் அந்த பிரச்சனைகளை எல்லாம் நீங்கள் சமாளித்து விடுவீர்கள் என்பதையும் இது குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

நீங்கள் உங்களுடைய வீட்டில் புதிய ஒரு பல்லியை கண்டால் அது உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை குறிப்பிடுகிறது. அதாவது நீங்கள் பலவிதமான சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருப்பீர்கள். பல விதமான சோதனைகள் உங்களை சூழ்ந்திருக்கும். ஆனால் நீங்கள் புதிதாக உங்களுடைய வீட்டில் ஒரு பல்லியை காணும் பொழுது நீங்கள் இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி அதிலிருந்து வெளிவந்து நல்ல ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழப்போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

உங்களுடைய வாழ்க்கையில் புத்துணர்ச்சியோடு அடுத்த நிலைக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல கலாச்சாரங்களில் வீட்டில் பல்லிகள் இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. சீன கலாச்சாரத்தில் பல்லி ஒரு டிராகன் குழந்தை என நம்பப்படுகிறது.

இந்த பல்லிகள் சீனர்களின் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என நம்புகிறார்கள். பழங்கால எகிப்தியர்கள் சித்திர எழுத்துக்களில் பெரும்பாலும் பல்லிகளின் அடையாளங்கள் இருந்தது.

அங்கு பல்லிகள் அதிக செல்வத்தின் அடையாளமாக இருந்துள்ளது. செல்டிக் இன மரபுகளில் பல்லி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. இவர்கள் பல்லியை செல்வத்தின் அடையாளமாகவும், செழிப்பின் அடையாளமாகவும் கருதியுள்ளனர்.

செல்டிக் இன புதுமணத்தம்பதிகள் தங்களுடைய முதல் திருமண இரவில் பல்லி சத்தம் இடுவதை கேட்க ஆர்வத்துடன் இருப்பார்கள். அன்று பல்லியின் சத்தத்தை கேட்பது திருமண பந்தத்தில் நல்ல அதிர்ஷ்டத்தையும், சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் கொடுப்பதன் அறிகுறியாக அங்கு கருதப்படுகிறது. உங்களுடைய மனதில் அவநம்பிக்கை இருக்கும்பொழுது, பிறரை ஏமாற்றும் எண்ணம் உங்களுடைய மனதில் இருக்கும் பொழுது, வஞ்சகம் உங்களுடைய மனதில் இருக்கும் பொழுது, மோசமான விஷயங்களை நீங்கள் உங்களுடைய மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது நீங்கள் உங்களுடைய வீட்டில் பல்லியை பார்த்தால் அது எதிர்மறையான விளைவுகளை உங்களிடம் ஏற்படுத்த போகிறது என்பதை குறிக்கிறது.

இது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட மோசமான எண்ணங்கள் உங்கள் மனதில் இருக்கும் பொழுது நீங்கள் பல்லியை பார்த்தால் அந்த மோசமான எண்ணங்களும், விஷயங்களும் உங்களையே திருப்பித் தாக்கும் என்பதையும் அது சொல்வதாக இருப்பதாக நம்பப்படுகிறது. ஆகையால் மோசமான எண்ணங்கள் இருக்கும் பொழுது நீங்கள் பல்லியை பார்த்தால் உடனடியாக அவற்றை விட்டுவிட்டு நல்ல நேர்மறை எண்ணங்களை நினைத்து நல்ல விஷயங்களில் கவனத்தை செலுத்துவது நல்லது எனவும் சொல்லப்படுகிறது.

பல்லிகள் பாதுகாப்பின் ஒரு வழிமுறையாக தங்களுடைய வாலை உடைத்துப் போடும். இப்படி பல்லிகள் தங்களுடைய வாலை உடைக்கும் பொழுது நீங்கள் அதை பார்த்தால் அது உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு சில ஆபத்துகளை குறிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் உங்களை ஏமாற்றும் குணத்தோடு இருப்பார்கள்.

இல்லை என்றால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள் என்பதை குறிக்கிறது என சொல்லப்படுகிறது. அதுபோல நீங்கள் மிகவும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் திடீரென உங்களிடம் உறவை முறித்துக்கொண்டு உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்பதை குறிப்பதாக இருப்பதாகவும் இது சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.

அதுபோல புதிதாக ஒருவர் உங்களுடைய வீடு தேடி வரும் பொழுது, அவர் உங்களுடைய வீட்டிற்குள் நுழையும் பொழுது, உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பல்லி சத்தமிட்டால் அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.

வந்திருக்கும் நபர் உங்களிடம் பேசும் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அவருக்கு நீங்கள் உடனடியாக எந்த வாக்குறுதிகளையும் கொடுக்கக் கூடாது என்பதையும் இது குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

ஒருவேளை உங்களை பிரச்சனைக்குள் மாட்டிவிடும் சூழ்நிலையாகக்கூட அது இருக்கலாம் எனவும் இந்த நேரத்தில் பல்லிகள் சப்தமிடும் பொழுது கவனமாக கேட்டு பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்பதையும் இது குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

நீங்கள் உங்களுடைய வீட்டில் ஒரு பல்லியை பார்க்கும் பொழுது இறந்துபோன உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அல்லது உங்களுடைய நண்பரின் முகம் வந்து போனால் அது அவர்களுடைய நினைவாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்கள் கூட இருந்து உங்களை ஆசீர்வதித்து உங்களை காத்துக் கொண்டிருப்பதன் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது.

பல மத்திய தரைக்கடல் நாடுகளில் மக்கள் நெருக்கமான ஒருவர் இறந்த பிறகு அவருடைய காரியங்கள் முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் பொழுது பல்லியை காண நேர்ந்தால் அந்த நபர் அவர்களுடன் கூடவே இருந்து அவர்கள் மனதை அமைதிப்படுத்தவும் எல்லாவற்றையும் நன்றாக செயல்படுத்தவும் கூடவே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது என நம்புகிறார்கள்.

இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தங்களுடைய வீட்டில் பல்லிகளை அடிக்கடி பார்ப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. செல்டிக் புராணங்களில் பல்லியின் கண்களிலிருந்து தூக்கத்தை இரவு தெய்வமான எவாகி திருடி அனைத்து உயிரினங்களுக்கும் கொடுத்தார் என நம்பப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் தூக்கம் இல்லாமல் இருந்தால் பல்லிகள் உங்களை நெருங்கி வருமாம். ஜப்பானிய கலாச்சாரங்களில் பல்லிகளை அவர்கள் வீடுகளில் பார்த்தால் விரைவில் அவர்களுடைய குடும்பத்தில் திருமணங்கள் நடைபெறும் என நம்பப்படுகிறது.

ஜப்பானியர்கள் பல்லிகளை கண்டால் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதையும் குறிக்கிறது என நம்புகிறார்கள். பல ஆப்பிரிக்க கலாச்சாரங்களில் பல்லிகள் நோய்களை ஏற்படுத்தும் ஒரு சகுனமாக பார்க்கப்படுகிறது.

பல்லியை கண்டால் நோய்கள் ஏற்படும் என அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கலாச்சாரங்களில் உள்ளவர்கள் தங்களுடைய கைகளால் பல்லியை எக்காரணத்தைக் கொண்டும் தொடமாட்டார்கள். நவீன மருத்துவம் இதுவரை செல்லாத பல ஆப்பிரிக்க கலாச்சாரங்களில் பல்லிகள் கொடிய நோய்களை கொண்டு வருகிறது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில கலாச்சாரங்களில் பல்லிகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பல்லியை மிகவும் மதிக்கும் கலாச்சாரங்கள் பல உள்ளது. பல்லியை கொல்வது அல்லது பல்லிக்கு தீங்கு ஏற்படுத்துவது பல தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பல்லிகள் உங்களுடைய தலைமுறைக்கு சாபத்தை விட்டுச் செல்லும் என நம்பப்படுகிறது. சிறந்த கண் பார்வை கொண்ட பல்லிகள் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை சுட்டிக் காட்டும் திறன் கொண்டது எனவும் நம்பப்படுகிறது.

இது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இறப்பு மட்டுமல்லாமல் எல்லா வகையான ஆபத்துகளையும், உங்களுடைய நிதி ஆதாரங்களையும், செல்வ வளங்களையும், நல்ல உறவுகளையும் எடுத்துச் சொல்லும் ஒரு தீர்க்கதரிசியாகவே பல கலாச்சார மக்களால் பார்க்கப்படுகிறது.

Leave a Reply