கரண்ட் எப்ப வரும்னா கேக்கறீங்க … ஆத்திரத்தில் மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்….அதிர்ச்சி சம்பவம் …

மின்சாரம் வரவில்லை என புகார் அளிக்க வந்த மக்கள் மீது மின்வாரிய ஊழியர் மின்சார மீட்டரை தூக்கி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரீ மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்த ஒரு சில வீடுகளில் சரியாக மின்சாரம் வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலகம் சென்றுள்ளனர்.

மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் இல்லாததால் அவர் வந்ததும் அனுப்பி பிரச்சினையை சரிசெய்வதாக அங்கிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் கூறியுள்ளார். அப்போது அந்த மக்கள் குப்புராஜை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் குப்புராஜுக்கும் அங்கு வந்திருந்த மக்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த குப்புராஜ் அலுவலகத்தில் இருந்த மின் மீட்டர் ஒன்றை பொதுமக்கள் மீது வீசியுள்ளார்.

இதனை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பதில் நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply