கடலுக்கு அடியில் தங்கக் குவியல்..!! ஆதாரத்தை வெளியிட்ட அரசு…

கடலுக்கு அடியில் தங்கக் குவியல்..!! ஆதாரத்தை வெளியிட்ட அரசு…

300 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சான் ஜோஸ் என்ற கப்பலில் 1 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தங்க புதையல் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

1708-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி ஸ்பெயின் நாட்டு கடற்படைக்கு சொந்தமான சான் ஜோஸ் கப்பல் கொலம்பியா நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் பிரிட்டன் கப்பலுடன் போரிட்டு கொண்டிருந்தது. சண்டையில் சான் ஜோஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அது கரீபியன் கடல் பகுதியில் காணாமல் போனது. இந்த கப்பலின் உடைந்த பாகங்கள் 2015 – ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் அக்கப்பலில் 1. 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிமோட் கண்ட்ரோல் கேமிரா பொருத்தப்பட்டு 3 ஆயிரத்து 100 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ஸ்பெயின் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவின் மூலம் கப்பலுக்கு அருகே படகு ஒன்றும் இரட்டை பாய் மர கப்பலும் இருப்பது தெரிய வந்துள்ளது. தங்க, வெள்ளி நாணயங்கள், விலை உயர்ந்த எமரால்டு கற்கள், போர்சலின் தேனீர் குடுவைகள். பீரங்கி ஆகியவை கடலின் அடிபாகத்தில் சிதறி கிடக்கின்றன.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: