25 ஆயிரம் வளையல் வேலூர் மகா மாரியம்மனுக்கு அலங்காரம்!!

பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. வேலூர் மகா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய சுமார் 25 ஆயிரம் வளையல்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

வேலூர் பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி அன்ன காமாட்சி அலங்காரத்தில் பகவதியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை முன்னிட்டு பகவதியம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலையில் விளக்கு பூஜை மற்றும் மகா தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதேபோல் பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது. இதில் அந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply