திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.16 மணிக்கு தொடங்கி நேற்று காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து நேற்று காலை சுமார் 9 மணி வரை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அப்போது பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply