ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு!!

தஞ்சாவூர் கும்பகோணம் கும்பகோணம் பகுதிகளில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் விளக்கேற்றினர்.

பட்டீஸ்வரம் கோவில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆதிகும்பேஸ்வரர் கோவில் இதேபோல் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 11 மணிக்கு விநாயகர், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மங்களாம்பிகைக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆறு கால விநாயகர், சப்த மாதர்கள், துர்க்காம்பிகை, சுப்பிரமணியர் ஆகியோருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்்துகொண்டு திருவிளக்கேற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் மந்திரீஸ்வரி பீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

திருபுவனம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தலையாரி தெருவில் பிரசித்தி பெற்ற பாதாள மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி நேற்று மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல்கள் மற்றும் மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பாதாள மாரியம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகம், கோவில் நிர்வாகி சந்துரு மற்றும் பலர் செய்திருந்தனர். நாச்சியார்கோவில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் பொன்னியம்மன் கோவில் உள்ளது.

நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. அய்யம்பேட்டை அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply