சுவையான நண்டு குழம்பு தயார் !!!

தேவையான பொருட்கள் :
நண்டு = 1 கிலோ
எண்ணெய் = தேவையான அளவு
மிளகாய்த்தூள் = 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
புளி = ஒரு சிறிய உருண்டை
பெருஞ்சீரகம் = 1/2 ஸ்பூன்
தக்காளி = 4 பீஸ்
சின்னவெங்காயம் = 15 பீஸ்
உப்பு = தேவையான அளவு
கருவேப்பிலை = ஒரு சிறிய கொத்து
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
தண்ணீர் = தேவையான அளவு
கடுகு = 1 ஸ்பூன்
செய்முறை : 1

முதலில் நண்டுயை சுத்தம் செய்யவும்,வெங்காயம், தக் காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.புளியை தண்ணீரில் கரைத்து புளிக்கரைசல் தயார் செய்யவும்.

செய்முறை : 2

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காந்ததும்
கடுகு,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு வெங்காயம், தக் காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.புளிக்கரை சளுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும்.

செய்முறை : 3

வெங்காயம்,தக்காளி வதங்கியதும் நண்டுயை அதனுடன் சேர்த்து பிறகு புளி கரைசளுடன் சேர்த்த கலவையை ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 லிருந்து 15 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும். அனைத்து பொருட்களும் வெந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கவும். வேறு பாத்திரத்தில் மாற்றி மல்லிதழை தூவி பரிமாறவும்.

இப்போது சுவையான நண்டு (Crabs curry) குழம்பு தயார் !!!

Leave a Reply