சுவையான இறால் வடை ஈஸியாக செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள் :

இறால் = 1 கப்பு
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 1/2 கப்பு
சின்ன வெங்காயம் = 1/2 கப்பு
உப்பு = தேவையான அளவு
பொட்டு கடலை = 100 கிராம்
சோம்பு தூள் = 1 ஸ்பூன்

செய்முறை : 2

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைக்கவும்.தேங்காய் துருவல்,பொட்டுகடலை மற்றும் சுத்தம் செய்து வைத்த இறால் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.

செய்முறை : 2

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.பிறகு அரைத்து வைத்த இறால்,பொட்டுகடலை,தேங்காய் துருவளுடன் மிளகாய் தூள்,சோம்பு தூள்,மஞ்சள் தூள்,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.

செய்முறை : 3


பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்த மாவை வடை போல தட்டையாக செய்து எண்ணெயில் போட்டு கருகாத அளவு வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சுட சுட இறால் வடை ( Shrimp recipes )தயார் !!!

Leave a Reply