இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது… பிரதமர் மோடி சுதந்திர தின உரை….

நாட்டின் சுதந்திரத்தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றியபின் உரையாற்றிய பிரதமர் மோடி, “உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன். 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம் .

உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி  நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது; நான் தான் சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த இந்தியாவின் முதல் பிரதமர்;  ஆனால்,  சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்களின் வலிகளை நான் உணர்ந்துள்ளேன்.

அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம்; குழந்தைகள் கூட வெளிநாட்டு பொம்மைகளை வைத்து விளையாட மறுக்கின்றனர்.இந்தியா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்திற்கான தடைகளை வெளியேற்ற வேண்டும். எவ்வளவு காலத்திற்கு தான் நாம் பிறரையே நம்பி இருக்க முடியும் அனைத்து துறைகளிலும் சுயசார்பு நமக்கு தேவை. இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை  அகற்றப்பட வேண்டும்;

அனைவரும் வாருங்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்,  அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். நமது நாட்டின் மொழிகளின் பெருமையை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்;  நமது ஒவ்வொரு மொழியும் போற்றப்பட வேண்டும் அதை குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். தீவிரவாதம், இயற்கை பேரிடர் உள்ளிட்ட முரண்பாடுகளை கடந்து இந்தியா முன்னேறி வருகிறது ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர்.  அனைவரும் வாருங்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்,  அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம்” என்றார்.

Leave a Reply