ஒரு யானைக்கு ஆபத்து என்றால் ஒட்டுமொத்த யானை கூட்டமும் பாதுகாக்க வேண்டி படையெடுக்கும்!!

மனிதர்களை போலவே கூட்டம் கூட்டமாக , ஒரு சமுதாயமாக வாழக்கூடிய உயிரினம் யானை. தங்கள் கூட்டத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு யானைக்கு ஆபத்து என்றால் ஒட்டுமொத்த யானை கூட்டமும் பாதுகாக்க வேண்டி படையெடுக்கும். அப்படியான ஒரு நெகிழ்ச்சி வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ :

இரக்க குணமுள்ள இரண்டு வயதே ஆன யானைக்குட்டிகள், தங்களது கூட்டத்தில் பிறந்து சில மாதங்கள் ஆன குட்டி யானையின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளது.

சியோல் மிருகக்காட்சிசாலையில் உள்ள குளத்தில் மூழ்கும் நிலைக்கு சென்ற பேபி யானையை இரண்டு யானைக்குட்டிகள் காப்பாற்றியுள்ளன. கேப்ரியல் கார்னோ மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில்..

வன விலங்கு காப்பகத்தில் உள்ள சிறிய குளத்தில் குட்டி யானை ஒன்று , பேபி யானையுடன் நீர் அருந்த செல்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேபி யானை நீரில் விழுந்துவிட , அப்போது அருகில் நின்ற குட்டி யானை அதனை காப்பாற்ற இங்கும் அங்குமாக ஓடுகிறது.

உடனே அருகில் இருந்த மற்றொரு குட்டி யானையும் ஓடி வருகிறது. நீந்திக்கொண்டிருந்த யானையை கரை வழியாக சென்று இரண்டு யானைக்குட்டிகளும் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றன. இந்த காட்சிகள் பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ ட்விட்டரில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 100.9 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply