தன் திருமணத்திற்கு உடன் பணியாற்றும் நபர்கள் யாரும் வரவில்லை: கடுப்பில் மணப்பெண் ராஜினாமா!!

திருமணங்கள் என்றால் எப்போதுமே பெரிய வகை கொண்டாட்டம் தான். தம்பதிகள் இருவரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மகிழ்ச்சியாக தங்களுடைய வாழ்க்கை இணையும் படலத்தை தொடங்குவார்கள். இதற்காக பல மாதங்கள் ஏற்பாடுகள் நடைபெறுவது வழக்கம். திருமணத்தில் முக்கியமான விஷயம் சாப்பாடு தான். அந்த சாப்பாடு ஏற்பாட்டிற்கு இரு வீட்டு நபர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்தி முடிவை எடுப்பார்கள்.

இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு சக ஊழியர்கள் வரவில்லை என்பதற்காக விபரீத முடிவை எடுத்துள்ளார். சீனாவின் ஒரு பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு கொரோனா காலம் என்பதால் அப்பெண் குறைவாக விருந்தினர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக தன்னுடைய அலுவலகத்தில் உடன் பணியாற்றும் 70 நபரை திருமணத்திற்கு அழைத்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவையும் தயார் செய்துள்ளார். இந்தச் சூழலில் அவருடைய திருமணத்தன்று உடன் பணியாற்றும் நபர்களில் ஒருவர் மட்டுமே வந்துள்ளார். இதனால் அவர் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த சுமார் 6 டேபிள்கள் நிறையே சாப்பாடு வீணாகியுள்ளது.

இதன்காரணமாக அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன்னுடைய திருமணம் முடிந்த அடுத்த நாளில் அப்பெண் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் தன் திருமணத்திற்கு உடன் பணியாற்றும் நபர்கள் யாரும் வரவில்லை என்று கூறி ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவரின் இந்தச் செயல் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply