இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத வகையில் 81 அடியில் சிவன் சிலை!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்தை ஒட்டியவாரே அமைந்திருக்கிறது ஒப்பில்லாமணி உடனுறை மெய்நின்றநாதர் திருக்கோவில்.

இங்குள்ள சிவன் சிலைதென்னிந்தியாவிலே மிக உயரமான 81 அடியில் சிவன் சிலையும், இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத வகையில் “7 1/4 “அடி உயரத்தில் தலைமை புலவர் நக்கீரர் சிலையும் அமைத்துள்ளது.

பாண்டியர்களின் தலைமைப் புலவரின் பெயரால் வழங்கப்படும் கீரமங்கலத்தில் உள்ளது நக்கீரரால் வணங்கப்பட்ட மெய்நின்ற நாதர் ஆலயம்.

கோவிலின் முன்னர் உள்ள தடாகத்தில் 2016ம் ஆண்டு கட்டப்பட்ட பீடத்துடன் சேர்த்து 81 அடி உயரமுடைய நின்ற நிலையில் உள்ளது சிவன் சிலை. இந்த சிலை தென்னிந்தியாவில் உயரமான சிவன் சிலை எனவும் கூறப்படுகிறது.

சங்க காலத்தில் நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த வார்த்தைப் போருக்கு பிறகு இந்த திருத்தலத்திற்கு வந்த நக்கீரர், கோவில் முன்னிருக்கும் தடாகத்தில் நீராடிவிட்டு ஈர மேனியோடு ஈசனிடம் சென்று தனது வாதத்தில் என்ன தவறு என்று முறையிட்டதாக வரலாற்று தொடர்பு கூறப்படுகிறது.

நக்கீரரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம் என்பதால் தான் இந்த ஊருக்கு நக்கீரமங்கலம் என்ற பெயர் உருவானதாகவும் அது மருவி கீரமங்கலம் என அழைக்கப்படுவதாகவும் ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.

தடாகத்தின் நடுவே இருக்கும் 81 அடி சிவன் சிலைக்கு நேராக கோவிலின் முன்னர் “7 1/2” அடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் மெய்யே உருவாக மெய்நின்ற நாதர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாளிக்கிறார் அம்பிகை ஒப்பில்லாமணி.

கோவிலில் பிரகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் பைரவர் என அருள்பாளிக்கின்றனர். கொடிமரத்தின் அருகே இருக்கும் பிரதோஷ நந்திக்கு பிரதோஷ தினங்களில் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

கீரமங்கலத்தை சுற்றி இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்களின் திருமணங்கள் 75% இந்த கோவில் வளாகத்தில் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

ஏறத்தாழ 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறை உடைய இக்கோவிலிற்கு 800 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2016ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

Leave a Reply